Sunday, October 9, 2011

தீபாவளிக்கு ரஜினி, ஷாருக், அமிதாப் !


ஷாருக்கான், கரீனா கபூர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'ரா.ஒன்'. அனுபவ் சின்ஹா இயக்கி இருக்கிறார். EROS நிறுவனம் இப்படத்தினை வெளியிட இருக்கிறார்கள்.

ஷாருக்கான் தன் படம்  வெளியாகும்போது அதை பலவிதங்களில் விளம்பரப்படுத்துவார்.  தன் விளம்பர யுக்தியால் YOUTUBE, CLT20 என பல்வேறு தளங்களில் ரா.ஒன் படத்தினை விளம்பரப்படுத்த ஆரம்பித்து இருக்கிறார். குழந்தைகள் விளையாடும் கேம் ஒன்றையும் படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

தீபாவளிக்கு 'ஏழாம் அறிவு', 'வேலாயுதம்' ஆகிய படங்கள் மட்டுமே இதுவரை வெளிட உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 'ரா.ஒன்' படத்தை  தமிழ்நாட்டில் அபிராமி ராமநாதன் வெளியிட இருக்கிறார்.

ரஜினி இப்படத்தில் ஒரு காட்சியில் நடித்து இருக்கிறார். உடல்நிலை தேறிய பின் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் படம் என்பதால் இப்படத்திற்கும் எதிர்ப்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

இந்தி படங்களுக்கு உலக அளவில் மார்க்கெட் உள்ளது என்பதால் அனைத்து தரப்பு மக்களையும் கவர வேண்டும் என்பதில் கவனம் காட்டியிருக்கிறார்கள். அமிதாப்பச்சன் 'ரா.ஒன்' படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசி இருக்கிறார்.

ஷாருக்கான், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சஞ்சய் தத், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா என ஒரு பெரிய திரையுலக பட்டாளமே 'ரா.ஒன்' படத்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.

'ரா.ஒன்'  படத்தின் தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வரவிருக்கிறார் ஷாருக்கான். படத்தின் இசை வெளியீட்டை முடித்தவுடன் ரஜினிகாந்தை சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கிறார்.


No comments:

Post a Comment